வசதி படைத்தோர்க்கு
சட்டென திறக்கும் நுழைவாயில் ..!
வறுமையில் வாடுபவர்களுக்கு
திறக்காத நுழைவாயில் .!
நாய்களும் விரட்டிடுமே
நுழைவாயிலில்
நலிந்தோரைக் கண்டால் ..!
நுழைவாயில் வரை வந்து
உபசரிக்கும் காலம் போய்….
நுழைவாயிலிலே
விசாரித்து அனுப்பும்
காலமடா..!
உள்ளங்கள் திறக்காத வரையில்
நுழைவாயில் திறந்தும் பயனில்லை ..!
ஷே.சாகுல்அமீத்