1.சுருட்டை முடிக் காரி புதுப் பெயர் பெற்றாள் நூடுல்ஸ் மண்டைக் காரி என்று…
கலைந்த தலைக் காரியாக இருப்பவளுக்கு இந்தப் பெயர் பிடித்துப் போனதில் ஏறிப் போனது கொஞ்சம் சோம்பல்…
நூடுல்சையும் தன் மண்டைய்யும் ஒரு சேர photo எடுத்து பதிவிட அள்ளியது likes என பெருமைப் பட்டாள்…
தலை கோதி முத்தமிடும் காதலனிடம் திருமண பேச்சை எடுக்க ஏய் நூடுல்ஸ் மண்ட இன்னும் போகட்டும் ஒரு வருசம் என்றான்…
இன்னும் முடி இறக்காதது தான் தன் மகள் கல்யாணம் தடங்கிட காரணம் என பூ முடி கொடுக்க சொல்ல யோசித்தாள் தாய்…
ஆறிய நூடுல்ஸை வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து insta வில் மூழ்கினாள் இந்த சுருட்டை முடிக் காரி…
கங்காதரன்
படம் பார்த்து கவி: நூடுல்ஸ் மண்டைக் காரி
previous post