நூலெடுத்து கோர்த்து வைத்த
முத்து மணி மாலை
வெக்கபட்டு சிரிக்குதடி
உன் அங்கம் தொட்டதால!!
மாலை தீண்டிய தேகம்
நானும் தீண்டலாமோ!
ஆலையிட்ட கரும்பாய்
அக பட்டு கொள்ளலாமா!!
முத்து முத்தாய் வியர்வை துளி
முத்து மணியிலே ஒட்டுதடி
உப்பு தண்ணீர் பட்டதால்
முத்து மாலை கருக்குதடி
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)