வண்ணம் இல்லாத தண்ணீருக்கு வண்ணம் கொடுத்த நெகிழி போத்தல்
குட்டிப் பிள்ளைகளின் கையில் விரும்பிய வடிவில் நெகிழி புட்டி
நிறங்கள் பலவாம் தரங்கள் பலவாம்
தகுதிக்கேற்ப எல்லோர் கையிலும்
மக்காக மாறி மண்பாண்டம் மறந்தோம்
மட்கா நெகிழியால் போத்தல் செய்தோம்
நீண்ட நாள் உழைக்கும் என்று
நெகிழியின் பின் சென்று
நாமே நம்
நீண்ட ஆயுளை குறைத்துக் கொண்டோம்
— அருள்மொழி மணவாளன்.
