வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோ
வழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமா
மாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்
தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதே
இயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமே
செயற்கையின் எதிர்மறை ஆற்றலை அகற்றுமே
எந்நிலையிலும் எளிதாய் செழித்தே வளர்ந்தே
தன்நிலையதால் சார்ந்தோர் செழிக்கவும் செய்திடும்
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா