கரங்களில் எந்தவித
வறட்சியும் தூசியும்
மிரட்சியுடன் படியும்
அதை நீக்க
கைக்கு அணிவோம்.
மெய்யான கையுறை
செய்யும் இச்செயலால்
நோய்க்குத் திரையிட்டு
மெய்யுள்ள ஆரோக்கியம்
தேடி வருவது உறுதி…..
மனித உயிரை
இரக்கமின்றி கொல்லும்
கயவன் அணிவதும்
கையுறை தான்……
அதை மனதில் இருந்து
எடுத்து விடுவோம்
விதை என்ற ஆரோக்கியத்தை கையுறையாக அணிந்து
அது ஆரோக்கியம் என்ற
விருட்சமாக வளர்ந்து
மருவில்லா வாழ்க்கை
தருமென நம்பி
நோய்க்குத் திரையிடுவோம்!
உஷா முத்துராமன்