பகட்டானவளுக்கு மிகட்டதிகமே!
மொட்டுடம்பினளுக்கு துட்டதிகமெனினும்
தொல்லைத் தோலுரித்து
துள்ளளுடல் தந்திடுவாளே!
அரக்காடை உடுத்திய
வெண் அகக்காரி
அரத்தம் கூட்டி
புரதம் பெருக்கையில்
முத்துளி மூன்றென
நித்தம் நாடி
சத்துடன் வாழ்ந்திடின் தவறில்லையே!
புனிதா பார்த்திபன்