பசுமைப் பக்கங்களே
உனது
பங்களாவானதா?
எப்படியாவது
எட்டிப் பிடித்து வேண்டுமென
எகிறிக் குதித்து
வெளிவர நினைக்கையில்
சிக்கிக் கொண்டாயா?
கவலை உனக்கில்லை
உனக்குத்தான்
நிலமும் நீரும்
சொந்தமாயிற்றே..
எழில் இல்லாத
இனத்தில்
பிறந்தாலும்
பசுமை நிறம்
பெற்றது எப்படி?
இலைகளுக்களின்
சுவாசத்தால்
வாசம் பொற்றாயோ!
ஆதி தனபால்
