தனித்தனியாகப்
பிரிந்து நின்றாலும்
சேர்ந்தே வந்து
சமையலின்
வலது கையாக
உலா வரும்
உன்னதம் நீ..
தேங்காய் சட்னியோ
உனைப் பார்த்தால்
ஏங்கத்தான் செய்யும்
உனது வாசமில்லையெனில்
அதனழகு
கேள்விக்குறியாகிப் போக…
சுவையும்
சுமாராகிப் போகும்…
குழம்புகளின் வானில்
நீ என்றும்
வானவில்தான்!
பசுமைத் தாளிப்பின்
பயனறியாமல்
யரேனுமுளரோ!!
ஆதி தனபால்