முற்றத்தில் நிற்கும்
மரங்களை வெட்டி ..
வீட்டின் உள்ளே
பணச் செடி வளர்க்கிறேன் ..!
இயற்கை ஆர்வலன் என்பதற்காக அல்ல ..
கௌரவத்தை
காண்பிப்பதற்காக..!
என்ன செய்வது.?!
பனைமரம் வளர்ப்பவன் பாமரன் ..!
பணச் செடி வளர்ப்பவன்
பணக்காரன் ..!
பணச் செடிகளே
தீர்மானிக்கின்றன
மனிதனின் ஏற்றத்தாழ்வை..!
