பதமாகியே
பாலின் சுவையெனும் விதமாகின -பாதாம்
போதா நலமுடையோரும் போதும் நலமடைய தோதாகுமே
பதமாகியே
பாலின் சுவையெனும் விதமாகின -பாதாம்
போதா நலமுடையோரும் போதும் நலமடைய தோதாகுமே
தோதாகினும்….
தீதுமுளதே!!
தீதிலாதேதுமிலையே?!
அளவதிகமானால்
அமிழ்தும் நஞ்செனவே
அறிந்தும்
போதமிலா பேதைமையாய்
நீதமிலா விதமாகியே
ஏதுமிலா பதமாதலே பாதகமாம்
ஆதலாலே
பாதாமும் போதிக்குதோ
ஏதாகிலும் வீதமுளதே,
வீதமறிந்தே மிதமென நடந்திடவே.
ஜே ஜெய பிரபா