விரல் நகம் படும் அழுத்தம்,
மரணத்தின் இசைக்கருவி.
உயிர் மூச்சு அடங்கும்,
உடல் சிலையாகும்,
ஒரு பொழுதில் எல்லாமே மாறும்.
காலம் இங்கே நிற்கிறது,
அழியாத ஒரு கணம்,
வலிகள் கண்ணீராக உறைந்து,
கதைகள் மௌனமாக மாறும்.
முன்னால் ஒரு கருப்புப் புள்ளி.
உயிருக்கு இடையில்
நிகழும் நிசப்த யுத்தம்.
காலம் மெதுவாய் நகர்கிறது,
மூச்சுக் காற்று கனமாய் மாறுகிறது.
இறுதி வினாடி இதுதானோ?
இதயத்தில் ஒரு கேள்வி.
மரணத்தின் முகம் இதுதானோ?
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே சத்தம்.
முடிவில்லா இந்தப் பயணம்
ஒரு நொடியில் முடிகிறது.
இ.டி. ஹேமமாலினி .
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: பயம் உறைந்த விழிகள்
previous post