பரந்து விரிந்த களம்
பார்த்துப் பார்த்துப்
பூரித்துப் போனேன்
ஆதி வேரின்
அடையாளம் அறிய முற்பட
முன்னோனின் முகவரியை
நினைக்க நினைக்க
ஆழியின் ஆழதேசம் போல்
அத்துணை அழகையும்
இழை இழையாய்ப்
பிரித்து நோக்க
முத்து முத்தாய்ப்
பிறப்பெடுத்த
முத்தமிழின் அழகை
எடுத்தோதிட
இப்பிறவி போதாது
தமிழலை ஓய்வில்லாமல்
சொற்களின் சிறகுகளால்
ஒலித்துக் கொண்டு
பயணப்படும் இப்புவியில்
எப்பொழுதும்
எப் பொழுதும்!
ஆதி தனபால்