பரமசிவன் கழுத்திலிருக்கும்
பாம்பு போலவே
மருத்துவன் கழுத்தில் இருந்து
நீ மகுடி வாசிக்கிறாய்
லப் டப் லப் டப் என்னும் ஓசையிலே
என் இதயத்தின் மௌனத்தை மொழிபெயர்கிறாய்
உன்னைக் கழுத்தில் அணியும் போது
மனிதன் தெய்வநிலை அடைகிறான்
உயிர்காக்கும் உயரிய சேவைக்கு
உற்ற துணை நீதானே
உயிர் போகும் வரை
ஓய்வின்றி உழைப்பது
உன் தலையாய கலை
விலை போகும் சில களைகளே
உன் மகத்துவத்துக்கு வரும் பிழை
சர் கணேஷ்