வாழ்கை என்பது ஓர் பரமபதம்
ஏற்றம் இறக்கம் துன்பமின்பம் எனவும்
சுகம் துகமது மாறி மாறி வரும்
சிரிப்பிலும். உயர்விலும் இடராத மன வேண்டும்
காதல். கடமை கல்யாணம் என
கடமைகள். நம்மை நித்தம் பந்தாடும்
விளையாட்டிலும் வலிகள் உண்டு வேதனை உண்டு
கரு நாகத்திடமும் கருணை இருக்கும்
கண்ணகியின் கைகளிலும் கலி ஆட்டம் தொடங்கும்
சிரிப்பில் சிதறி விடாதே அழுகையில்
அடைந்து விடாதே விதிகளை மீறவும்
கூடாது
மதி உண்டு என்பதை மறந்திடவும் கூடாது
ஆனந்தமாய் விளையாடு அடி தடுமாறினாலும் வீரநடைபோடு.
மித்ரா சுதீன்
