கறுப்பு கண்ணாடி உன்
கண் என்ற உறுப்பினை
காக்கும் உற்ற நண்பன்
பகலில் பரிதியின்
பளிச்சென்ற வெளிச்சம்
சுளீரென விழிகளை
பார்த்தாலும் வெட்கம்
அதிகமாகி கண் கூசும் ..
அதனால் கருப்பு கண்ணாடி பரிதியின் பரம ரசிகனாகி
வரும் கதிர்வீச்சில் இருந்து
கண்களை காப்பது போல்
மண் தூசு என எதையும்
அண்ட விடாத
வாயில் காப்போனாகி உதவும்
அணிவோம் கறுப்பு கண்ணாடி காப்போம் கண் என்ற உறுப்பினை!
உஷா முத்து ராமன்