பாதாம்பருப்பு
பருப்புலகின் பந்தமானேன்..
கிடுகிடு
விலைவாசி உயர்வால்
எனது தலையிலும்
இடி…
அதனால்தான்
பாமரனின் பகையானேன்..
சுப விழாக்களில்
தட்டுக்கூடையில்
தவறாது இடம்..
கிளிமூக்கின் நுனி
எனது நுனி..
மேல் தோலினால் தோல்வியென
நினைத்திருந்த வேளை
உட்புறத்தின்
சமாதான நிறம்
என்னை
ஏற்றத்தின்
உச்சத்தில் நிறுத்த..
அத்தனை மகிழ்ச்சியையும்
அள்ளிக்கொண்டு
நீரில் மூழ்கிக்
கூத்தாடினேன்..
தோல்வியிலிருந்து
பெற்ற வெற்றி
எனது
இரகசியமானது
உள்ளிருப்பு …
உள் பருப்பு
உண்ண உண்ண
சுவாரசியமென
மக்கள் மனதில்
இடம் பிடித்தேன்…
ஆதி் தனபால்
