பருப்பெது என்ற விளக்கம் அறியா முன் அம்மா தந்தாள் பருப்பு சாதம்…
ஒரு விரல் விடாமல் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வாய் என பகலில் இல்லா நிலவுக்கும் உணவுண்டு…
முதல் சாம்பரென காதலியும், குடித்துப் பார் ரசமென மகளும் சாப்பிட கொடுத்து காரியம் சாதிப்பர்…
வீணான சாம்பாரின் பருப்பனைத்தும் என் வீட்டு நாய்க்கென்பது எழுதப் படா விதி
விலையேற்றம் பேசும் போது மறக்காமல் வந்து விடும் பருப்பின் விலை…
வறுமை பிடித்த தாக சொல்லி மூன்று நாளைக்கு பருபில்லா உணவு பிறகென்ன சண்டையிட்ட மனைவியை கட்டிக் கொண்டு சமாதானப் படுத்தியதாய் மீண்டும் வரும் பருப்பு மாளிகையில்…
பிரிதொரு உணவொன்று பழகும் வரை பருப்பின்றி கல்யாணமில்லை என்ற பழமொழிக்கு அழிவில்லை…
- ஒரு குவளை பருப்பு தானிருக்கிறது என்ன செய்ய என்கிறாய்…
உணவு நல்லா இருக்காது பருப்பின்றி என்கிறாய்…ஏதேனும் ஒன்று செய்… உன் கண்பார்வையும் கன்னச் சுவையும் போதுமடி இந்த ஆயுளுக்கு ஒரு பொழுது போகாதா என்ன? - எட்டாக் கனிகளில் பருப்பை சேர்த்து விடுங்கள் வறுமை கோட்டுக் குடும்பங்களின் கோரிக்கை… பருப்பில்லை என்ற வார்த்தையை பக்குவமாய் சொல்லப் பழகி விட்டார் ரேஷன் காரர்…
கங்காதரன்