மென்று கடித்த
உணவு
ஆரோக்கியம் தரும்.
பற்களின் நலன்
உடலின் நலன்.
பல்துலக்கி,
பற்கள் காவலன்…
பற்கள் மேல்
மேவுவதால்
பற்தூரிகை…
இரவிலும் பிரஷ் (brush)
செய்தால்
காலையில் பிரஷ் (Fresh) தான்!
புதுச்செருப்பு
கடிப்பது போல
புதுத் துலக்கி
ஈறுகளில்
உதிரம் காட்டும்…
காலையில்
கண் விழித்தவுடன்
முகமன் கூறும்
பல்துலக்கி
நம் நண்பன்..!
S. முத்துக்குமார்