அம்மா சுற்றுதர
ஆசையுடன் சாப்பிடும்
இன்றும் நேசிக்கும்
ஈடில்லா தின்பண்டம்.
உன்னை விரும்பாதவரும்
ஊரில் உண்டோ?????
எனக்குத் தெரிந்து
ஏற்றம் தரும்
ஐயமில்லா சுய தொழில்
ஒன்று உண்டென்றால்
ஓங்கி சொல்வேன்
ஔடதமாகி பலரின்
மஃகாத வாழ்விற்கு
நீயே ஜீவாதாரம்….
அப்பளம் செய்து விற்று
வளர்ந்த பலரின் வாழ்வுக்கு
நீயே அஸ்திவாரம் கூட…..
உஷா முத்துராமன்