பல் போனால்
சொல் மட்டுமா
அழகும் போகும்
சிரிப்பும் போகும்
ஆலும் வேலும்
பல்லுக்குறுதி
நாலும் இரண்டும்
சொல்லுக்குறுதி
முத்துப் போன்ற
பல் வரிசை பாதுகாக்க
துலைக்கிடுவோம்
பல்லை பல் துலக்கும்
பற்தூரிகைக் கொண்டு
அன்பின் அடையாளமாக
முத்தமிட துடிக்கும்
காளையிரே கன்னியரே
பற்கள் தூய்மையற்று
துர்நாற்றம் வீச
ஒருவருக்கொருவர்
முகத்தை திருப்பி
அன்பை அடைக்கும்
தாளாகுமே
க. ரவீந்திரன்.