பாசம் நேசம்
நட்பு காதல்
அனுசரிப்பு அரவனணப்பு
உழைப்பு வியர்வை
நேர்மை உண்மை
போன்ற பல முத்துக்கள்
சிந்தி சிதறாமல்
நம்பிக்கை எனும்
நூலில் கோர்த்த
முத்து மணி மாலையை
என் பாசத்துக்குரியவளின்
கழுத்தில் அணிவித்தேன்
அது அவள் கழுத்தில்
ஆடும் போதெல்லாம்
என் இதயம் ஆனந்தத்தில் தொட்டில் ஆடும்
ஆனால்
அவளது முத்து மாலை சிதறினால்
எனது வாழ்க்கை
எனும்
முத்து மாலை
சிதறிவிடும்…
M. W Kandeepan🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
