இல்லம் கட்ட முதலில்
ஆழமாக கிணறு தோண்டி
பழகியது அக்காலம் .
கிணற்றில் தண்ணீர்
இழுக்கும் போட்டியில்
மறைக்க முடியாத
ஆனந்தம் உண்டு
ஆழமான கிணற்றில்
அறியாமல் போட்ட
பொருள்களை எடுக்க
தேடினோம் பாதாள கொலுசை
இவை எல்லாம் மாறினாலும்
சுவையான மலரும் நினைவுகள்.
வாளியில் நீரை நிறைத்து
தோள் பட்டை குலுங்க இழுத்தது உடற்பயிற்சியானது….
திறந்த கிணறை மூடி
மறைந்த நினைவாகிப்
போனதே உண்மை
உஷா முத்துராமன்
