சமையலறையில் உன் பாதுகாப்பு!
நீயே என் வாழ்வின் பிடிப்பு!
நீயில்லா வாழ்வு எனக்கில்லை!
உன் கையுறையில்லாமல், சூடு பொறுக்கும் திறன் உனக்கில்லை!
உன் சமையலில் உணர்ந்தேன்
உன் பாசம்!
உன் கையுறையில் உணர்ந்தேன்
உன் வாசம்!
உலையடுப்பில் கொதிக்கும் குழம்பு!
என் மன அடுக்கில்
என்றும் குளிராய் உன் நினைவு!
அடுக்களையோடு நிற்கட்டும் கையுறையின் பணி!!!
உன் ஸ்பரிசத்திற்காக ஏங்கும் என் மனசிம்மாசனதில் அதோடு இல்லை இடம் இனி!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: பாதுகாப்பு கையுறை
previous post