மகிமை நிறைந்த
மஞ்சள் என்னுடைய
மதி விரும்பும் பாதுகாவலன்
மண்ணில் விளைந்தாலும்
மமதையில்லா காவலன் மகிழ்ச்சியுடன் பூசி
மங்கை குளிப்பதால்
மருவும் பருவுமில்லா
மழ மழவென முகம் மின்னுமென
மலை போல நம்பலாம்…
மனிதரின் புற்றுநோய்
மசித்துப் போக்கும் நண்பன்
மஞ்சள் நிற வெயிலை
மனமகிழ்வோடு ரசிப்பேன்
மஞ்சளை தஞ்சம் அடைவதால்
மகிழ்வான வாழ்வுறுதி
உஷா முத்துராமன்