படம் பார்த்து கவி: பாலகணேஷ்

by admin 2
29 views


அழகு வண்ண மயில் தோகை
போல் விரிந்து
இசைக்கு அசைந்தாடும்
செவிகளை கண்டேன்;
தன்னம்பிக்கையின்
துணையான தும்பிக்கையின்
மேலே மெல்லிய
சுருக்க கோடுகள்
நான் கண்டேன்;
கண்ணை கவரும் திராட்சை
பழம் போல் கண்கள்
ஒட்டியிருப்பதை நான் கண்டேன்;
முன்னங்கைகளை உனதாக்கி
பின்னங் கால்கள்
ஒன்றின் மேல் ஒன்றாக
சோழ மணி போல் நகம் பதிக்கு
முத்து போல் நிற்கும்
முதல்வனை
நான் கண்டேன்;
மெல்லிய மயிர்கள்
செவிகளுக்கு இடையிலே
தலையின் உச்சியிலே
பட்டு போன்று
வேய்ந்திருப்பதை
நான் கண்டேன்;
உன் சின்ன இதயத்தினை
அள்ளி எடுத்து காற்றில்
மிதக்கும் எண்ணற்ற
இதயங்களில் என் மீதான உன் மொத்த அன்பை நான் கண்டேன்;
அரியனையின்றி
என் மன சிம்மாசனத்தில்
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்
கணபதியை கண்முன்னே
நான் கண்டேன்;

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!