முடிவு
வெற்றியின் உழைப்பை
தோல்வியின் அனுபவத்தை
வலி கண்ட நாட்களின் வலிமையை
மீண்ட நாட்களின் சூழ்ச்சமத்தை
ஞானத்திலும் உள்ளத்திலும்
நங்கூரமென நிறைத்து
இன்னும் முதிர்வோடு
லட்சியத்தின் அடுத்த படியேறி
மூன்றாம்படி நோக்கி நகரும்
புதுப் பயணத்தின் ஆரம்பம்
ஏதோவோரு முடிவிலே
தொடங்குகிறது!
புனிதா பார்த்திபன்