வெளி உலகத்தின் ஓசைகள் அடங்க,
ஒரு புதிய உலகின் நுழைவாயில் திறக்கிறது…
கதவுகள் அல்ல,
ஒரு ‘Enter’ விசை…
புத்தக அலமாரிகள் நிறைந்த அந்த இடம்,
கற்பனைக்கும் எட்டாத நிலங்களைச் சுமந்து,
ஒளிபரப்பும் அற்புதம்…
தனிமையின் வார்த்தைகள்,
பல சுவாரஸ்யங்களைச் சேமித்து வைத்து,
நம்மை உள்ளே அழைக்கின்றன…
ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய பாதை,
ஒவ்வொரு வரியும் ஒரு புதிய பயணம்…
இது வெறும் மாயாஜால உலகம் அல்ல,
நம் கனவு நகரங்களுக்கு இட்டுச் செல்லும் வாசல்…
அனைத்துமாய்,
அழியாத எழுத்துக்களின் அலைக்கடலில்,
புதிய பாதையைத் தேடி,
உள்ளே செல்கிறோம்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: புது உலகம்
previous post
