பூவை மாலையாக்கும் முடிச்சு
நீயும் நானும் நாம் ஆக முடிச்சு
தொப்புள் கொடியிலும் முடிச்சு
தொட்டில் கட்ட முடிச்சு
நாணங்கயிற்றில் ஒரு முடிச்சு
வாழ்வில் எல்லா நிலையிலும் முடிச்சு
முடிச்சவிழ்த்தால் முடிஞ்சு போச்சு மூச்சு
வாழ்வில் வகை வகையாய் முடிச்சு
வரிசை படுத்த வழியில்லை எனக்கு
மலையேறும் கயிறில் இடும் முடிச்சு
மாடு கட்டும் கயிறிலும் முடிச்சு
மஞ்சள் தாலியில் போடும் முடிச்சு
வாழ்வென்பதே இனி முடிச்சு