பனியாறுகள் உருகிட!
பட்டமரம்
பற்றி எரிந்திட!
வெய்யோன்
தகித்திட!
பூமித்தாய்
தம் கருப்பையில்
பொக்கிஷமாய்
பாதுகாத்த அவள்
குழவிகள் கதறி
துடித்திட!
காலநிலை மாற்றம்
கனலை வாரி இறைத்திட!
சுற்றுச்சூழல்
சற்றே மாறி
உயிர்னங்களின் வாழ்வை கேள்வி குறியாக்கிட!
ஏன் இந்த விபரீதம்?
மக்களாகிய மாக்களின்
பேராசையின் விபரீத விளைவு!
ஒன்றை நான்றாய் கொடுத்தால்
நூறாய், ஆயிரமாய்,
லட்சமாய், கோடியாய்
கொடுத்திருப்பேனே
எம் குழவிகளுக்கு
எம்மை காத்திட மறந்தாயே?
*பூமித்தாயின் தவிப்பு/ தகிப்பு*
படம் பார்த்து கவி: பூமித்தாயின் தவி
previous post