படம் பார்த்து கவி: பெருங்காதல்

by admin 1
40 views

உன் மூச்சில் திறந்த
ஜன்னல்
வாடைக்காற்றின்
சில்மிஷங்களெல்லாம்
நீல நீர்ப்போர்வை சாத்திய
வான்குழாய்கள்
மண்ணில் சிந்திய
பெருங்காதல் தான்.

மழைக்காலத்தில்
அருந்தும்
தீர்த்த தேநீரில்
இன்னும் மிச்சமிருக்கிறது
ஏழடுக்களை தேக்கி வைக்க காத்திருக்கும்
அட்டையின்
குளிர்கால காமத்தை போல!

-நௌஷாத் கான்.லி-

You may also like

Leave a Comment

error: Content is protected !!