கற்பனைக் கண்களில்
ஒளிவிளக்கேற்றி
கார்முகில் கண்டு
களிப்புறும் மயிலாய்
மழை கண்டு
மலரும் வானவிலாய்
ஞானத்திற்கு செறிவூட்டி
ஞாலத்தின் நடப்பை
கவிப்படைப்பாய் உருவெய்திட
உள்ளுக்குள் உறங்கும்
உணர் உளிக்கு உயிர் தந்து
உருவற்ற தூண்டுகோளாய்
துணை நின்ற பெருந்தூண்!
புனிதா பார்த்திபன்