பேய் இருக்கா ??
இல்லையா ?
என்ற விவாதம் தேவையில்லை
ஆவிகள் பொய்யா ??
மெய்யா???
என்ற பட்டிமன்றமும் தேவையில்லை .
கண்ணுக்கு தெரிகின்ற எல்லா விசயங்களும் உண்மையானவையும் இல்லை .
கண்ணுக்கு புலப்படாத சில விஷயங்கள் பொய்யானவையும் இல்லை.
எல்லா ஆவிகளும் நல்லவைகளும் அல்ல .
எல்லா ஆன்மாக்களும் கெட்டவைகளும் அல்ல .
நம்மோடு பேசி ,பழகி ,சிரித்து நகையாடிய சில உறவுகள் இந்த மண்ணை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படலாம் .
மண்ணில் மக்குவது,
தீயில் எறிவது
வெறும் உடல் மட்டும்தான்
உயிர் அல்ல!.
உயிர் எங்கே போகிறது ???
என்ற வினாவின் விடையாக உதிர்த்த உண்மையும்,பொய்மையும்
கலந்த புனைவு தான்
ஆன்மா,பேய் ,மோகினி ,ஜின் எல்லாம்!
அருள் கிடைக்காத
இருள் இருக்கும் வரை ,
பயம் துரத்துகிற
மனம் இருக்கும் வரை
நம்மோடு
நண்பனாய் பேயும் இருக்கும்!
-லி.நௌஷாத் கான்-