பேய் எதுவோ?!..✨
அரண்டவன் பார்வையில்
இருண்டது மட்டுமா…?
அஞ்சுதல் அவனியல்பானால்
அனைத்துமே பேயன்றோ!!
தீராத நோயென்றாலும் தீர்வாக பேயென்கிறோம்
சாதிக்கத் தடையாகும்
சாதியமும் சாத்திரமும்
சாத்தான் ஆகிடாதோ
சோதனை சமூகத்திலே
பெண்ணியம் பேசியுமே
பெண்ணட(ங்)க்கிடும்
பேதைமையை
பேயென பேசலையே?!
கல்விக்கும் காசுவாங்கி
காவு கொள்கின்றனரே..
காசாசை கொண்ட
காட்டேரி கூட்டங்களாய்!
பொருளாதாரம் இல்லாததால்
பொருட்படுத்தப்படா நிலை
பேதைமை இல்லையே
பேய் தன்மையே!!
வலை தளங்களிலே
நிலை கொள்ளாமலே
அலைந்திடும்
அத்தனைபேருமே
அடங்கா ஆவிகள்தானன்றோ!
பூவென்றும் பாராதே
புணர்ந்திடும் பண்(வன்)புணர்ச்சி பூதாகர பூதமாகாதோ!?
பாசமென வேசமிடும் பாவியரும் பிசாசுகளே..
பொய்மைநிறை பூவுலகில்
பேயிடமாவது மெய்யுளதோ…
ஜே ஜெயபிரபா