படம் பார்த்து கவி: பேரின்பம்

by admin 1
87 views

பெரிதாய்
வேறென்ன கேட்டு விட போகிறேன்
பஞ்சு போன்ற
மிருதுவான
ரெண்டு அல்லது மூன்று இட்லி
அதற்கு தொட்டுக்க
புதினா அல்லது
சுவையான தேங்காய் சட்னி
அப்புறம்
உன் கைகளாலயே
ஊட்டி விட்டால்
இப்பிரபஞ்சத்தில்
பேரின்பம் ஏதடி?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!