பொன்னு விளையுற பூமி அது
மலை போன்ற மேடுகளும்
ஆழமான ஏரி போன்ற பள்ளங்களும் நிறைந்தது தான்
கடினமான மலையேறுதல்
காதலாகி போனதால்
கரிக்கும் உப்புக்கடலில் நீந்தி
மிளிரும் நட்சத்திரங்களை
கண் குளிர கண்டு விட்டு
வீடு திரும்பும் போதுதான்
மனசு ஏங்கித் தவிக்கிறது
இன்னும் கொஞ்சம்
அந்த புண்ணிய பூமியில் இருந்திருக்கலாமென்று!!
-லி.நௌஷாத் கான்-