பொம்மையின்மீது மழலையின் அன்பு
பொய்மையிலாதது
வழமையன்றோ
என்னை நேசித்தால் உன்னை நேசிப்பேன் எனும் மானிடவியலில்
மானுடத்திலே மாண்புமிகு மதிநிறை மதியிலாவன்பிதுவே
இம்மியும் பிரதியன்பு இலாதறிந்தும்
இதயம்நிறை இதம்தரும் அன்பு
அதீதம் ஆத்மார்த்தம் அதியாழமே
தனை நேசியா ஒன்றினில்
தன்னிகரிலா தனிப்பெரும் அதிமிகுவன்பு
ஜே ஜெயபிரபா