வீணாக்கவில்லை எனும்
பொய் நிம்மதிக்காக விஞ்சியதை
வீணாய் உன்னுள் புதைக்கிறேன் வீணாய்போனபின்
வீணாக்கப்பட்டது வீணாய்போனதென்று விளித்து குற்ற உணர்வின்றி
வெளியில் வீசுகிறேன்
விந்தையென எண்ணுகிறாயோ
மந்தியென எண்ணுகிறாயோ எனை
யார் அறிவார் குளிர்மனமுடையோனே!
புனிதா பார்த்திபன்