முழு நிலவில் உன் முகம் கண்டேன்
எங்கு சென்றாலும் என் பின்னே வந்தது
உன்னை போல
கர்வம் கொண்டேன்
நண்பன் என்னிடம் பேச வருகையில்
தன்னை மேகத்துக்குள் மறைந்தது
உன்னை போல
புன்னகைத்துக் கொண்டேன்
வெண்ணிலவே உன்னை தீண்டி அணைக்க விரும்புகிறேன்
வானத்து நிலவு போல் எட்டா தூரம் செல்வதேனோ
மறைந்து மறைந்து சென்றால் என்னுள்
உறைந்து கிடக்கும் காதலை காண்பது எப்போதோ
தைரியமாக என் முன்னே வா பெண்ணே கண்ணியமாக கைபிடிப்பேன்
காதலியாக அல்ல மனைவியாக
- அருள்மொழி மணவாளன்
