அமுதும் நஞ்சாகுமே
அளவதிகம் ஆகிவிடில்
மதி மயக்கும்
மது அதுவும்
அமுதெனவே ஆகிடுமே
அளவோடு அருந்திவிடில்
மயங்கும் மாயநிலை
மதி அடையாதே
தேவை எது
தெரிந்து வைத்து
அளவறிந்து அருந்திவிடில்
அத்தனையும் நலமாகுமே
இதயம் நலமாக்கும்
இரத்தமும் சுத்தமாக்கும்
சருமம் பொலிவாக்கும்
பருமனும் அளவாக்கும்
அருந்தும் முன்னும்பின்னும்
அதிகம் நீரருந்தணுமே
விரதமென உண்ணாமல்
புரதங்களும் உண்ணனுமே
அளவோடு அருந்தியே
நலமோடு வாழுவீர்
ஜேஜெயபிரபா