ஆதி முதல்
அந்தம் வரை
அருமருந்தாம்…
அனைத்து
மங்கல நிகழ்வுக்கும்
முதல் இருப்பாம்…
தென்னையும்
வாழையும் போல
மஞ்சளும்
வேர் முதல்
இலை வரை
ஈன்று உவக்கும்
வள்ளலாம்…
உள்ளும் புறமும்
மேனி காத்து
பார்ப்போர்
மனம் மரியாதை
தரும் மங்கல
மஞ்சளே — நீ
என்றும் உடன்
இருப்பாய்…
S. முத்துக்குமார்