அனைத்திலும் முதன்மை
அதுவே மஞ்சளின் மகிமை
பிடித்தால் பிள்ளையார்
கரைத்தால் புனித நீர்
தெளித்தால் மங்கலம்
மளிகை சாமான் வரிசையிலும்
மாளிகை வாசலிலும்
மங்கல பூசையிலும்
இறுதி காரியத்திலும்
உணவிலும் மருந்திலும்
காலை கதிரவனின் மஞ்சள் ஒளியில் தொடங்கும் நாள்
இரவு மஞ்சள் பால் குடித்து உறங்கும் நாள் – ஏன்
மஞ்சள் பூசி குளித்து வரும் மங்கையை கண்டு மயங்காதவர் உண்டோ
— அருள்மொழி மணவாளன்