மஞ்சள் மங்களத்தின்
அடையாளம்!
மளிகை பொருட்களின் வரிசையில் உனக்கே முதலிடம்!
தலைவாசலில் நீயே பிரதானம்!
நீயில்லா
வேள்வியா?
பூசையா? திருவிழாவா?
சடங்கா?
சம்பிரதாயமா?
பசும் மஞ்சளில் குழைத்த செல்ல பிள்ளையாரை வணங்கா மனிதருண்டா?
ஆயுர்வேத அருமருந்தாக,
இயற்கை
பூச்சிக்கொல்லியாக, மங்கையின் பொலிவாக
மஞ்சள் மணக்கும் மேனியலாள்,
அருகாமையில் சித்தம் சிதறி,
நினைவு இழந்த பனாதியான என்னை,
சுவை அரும்புகள் சிலிர்த்தெழ நாவுக்கு அடிமையாக்கி அலைக்கழிக்கிறாயே
மடந்தையே!
நானிலமும்
உன் தாள் பணிய தலைத்தாழ்ந்த உன் அடக்கத்துக்கு நெல்மணியே நிகர்!!!
இப்படிக்கு
சுஜாதா .
படம் பார்த்து கவி: மஞ்சள் மேனியலாள்
previous post