மணி மணியாய்
வளரத்துடிக்கும் இலைகள்
வெட்டுப் பட்டாலும்
மணிக்கணக்காய்
காத்திருக்காமல்
விழுந்த கணமே
மீண்டெழும்
அதிசயப்படைப்பு நீ!
இலைகளின்
ஆளுமையால்
தொட்டுப் படரும்
தொடர் பயணம் நீ!
மணியை (பணம்)இலைகளில்
சுமந்த பசுமை நீ!
உனக்குள் இருக்கும்
மதிப்பு
உலகறியும் …
ஆதி தனபால்