மண்டலத்தில் உலாவும் மண்டுகமே
பச்சை நிறத்தில் அமர்ந்து
இச்சையாக எதை தேடுகிறாய்?
மழை ஓய்ந்தபின் இரவில்
குரல் கொடுத்து அகிலத்தை
கிடுகிடுக்க வைக்கும்
நீ………………எல்லா மண்டலங்களிலும் உலாவும்
மண்டூகம் என அறிவோம்….
மருத்துவப் படிப்பின்
அஸ்திவாரமே உன்னை
உடற்கூறு செய்வது தானே…
தாவித்தாவி குதிக்கும்
உன்னை பள்ளி சிறார் முதல்
பல்லிழந்த முதியோர் வரை
சொல்லொணா இன்பத்துடன் ரசிப்பதை அறியாயோ…..!
உஷா முத்துராமன்