நண்டு கொழுத்தால் வலையில் தாங்காது!
நண்டு மட்டுமா?
மண்டுகமே நீயும் கூடத்தான்,
இலைமறைவில் நீயும்
பச்சையின் நிறத்தில் பசுமையுடன் ஒன்றிணைத்து ஒளிந்திருந்தால் போதுமா?
வாயால் கெட்ட மண்டுகமே, நிலத்திலும் நீரிலும் வாழும் திறனிருந்தும்,
என்றென்றும் நீ உன் எதிரியின் கண்காணிப்பில்,
கிணற்றிலேயே இருந்து உலகம் மறந்த உனக்கு உன் வாயே உன் எதிரி.
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: மண்டான மண்டுகமே
previous post