மதங்கள் எதுவாயினும்,
சாதிகள் எதுவாயினும்
நாமெல்லாம் மனிதர்களே.
பெரும்பாலான உள்ளங்களில்
இப்போதும் உள்ளதடா
மனிதமும்,சகிப்புத்தன்மையும் !
வணங்கும் மூவர்ண தேடியக்கொடி
நம் மதங்கள் கடந்த
ஒற்றுமையை பறைசாற்றுதடா
அரசியல் பிரிவினையை உருவாக்க
ஆயிரம் செய்யும்
அன்பு என்னும் ஆயுதம் கொண்டு
அகிலம் காப்போமடா
எவனவன் என்ன சொன்னால் என்ன?
நாமெல்லாம் பாரத தாயின் மக்களடா!
சுதந்திரம் இங்கு
அனைவருக்குமானது
உன்னை போல் அடுத்தவனையும் நினை
நீ மட்டுமல்ல
உன்னை சார்ந்த சமூகமும் சுபிட்சமாகும்!
-லி.நௌஷாத் கான்-
