பசுந்தழைமிகு மரமருகே
வீசுதென்றலும் நறுமணமே
அறுசுவைதரும் உணவினிலும்
ஆறாசுவையிதன் சிறுமணமே
குழவி முதல் கிழவி வரை உலவிடவே
அளவிலாத நலங்களையும் வழங்கிடுமே
கறிகாய் பிற வாங்கயிலே கறிவேப்பிலை இனாமானதால்
கோபுரத்தில் இல்லையென்றோ குப்பையில் இட்டதற்கோ
குணமும் குறையலையே மணமும் மறையலையே
பணம் எதுவும் கொடுக்கலையே மதிப்பில்லையென எண்ணிடாதீர்
விலைவைக்கவியலா மதிப்புறு மதிப்பானதாலோ
மதியறியா மதிப்பானதோ
நிலையில்லா உலகினிலே நிலைத்திடுவோம் நாமும் நம் குணமதிலே
ஜே ஜெயபிரபா