தாய்மை தந்தைமையென
இறைமையின் நிறைமையாய்
தோழமையில் தூயமையாய்
துவள்கையிலேயே துணையெனவாய்
துயரெலாம் துடைப்பவனாய்
தனிமையிலும் தன்னம்பிக்கையாய்
தனைத்தாழ்த்தியே எனையுயர்த்தவே
தயக்கமின்றி தனித்துயரவே
தூரமாய் தூரமாகியும்
துணையுணர்த்தும் தோழமையின்
அதீத ஆழ்ந்தன்பு
மதுவிலும் மதுவாகுதே…
ஜேஜெயபிரபா