பதை பதைக்குது மனசு
பருப்பெடுத்து நீ அளக்க
புரதம் இருக்கு என்று
புத்திமதி நீ சொல்ல
பருப்பு சாம்பாரை ஏற்குது
மனம் மெல்ல மெல்ல
அன்னத்தோடு ஆவின் நெய்
பருப்பு சாம்பாரோடு சேர்த்து பிசைய
நாவெல்லாம் நீர் சேரும்
நால் திசையும் மனம் கூடும்
கை விரலோடு ஒட்டியிருக்கும் சோற்றை
சட்டி விளிம்பில் வலித்தெடுக்தால்
வாய் திறக்குது அனிச்சை செயலாய்